உலகில் முட்டையை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா? இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகில் முட்டையை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா? இந்தியாவுக்கு எந்த இடம்?
ரஷ்யா மிகப்பெரிய நாடாக இருந்த போதிலும் முட்டை உற்பத்தியை பொறுத்த அளவில் ஏழாவது இடத்தில் இருக்கிறது

அசைவ உணவு பெரியவர்களால் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய பொருளாக முட்டை உள்ளது. இதனை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் எவை என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்

முதலிடத்தில் சீனா இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு மட்டும் ஆண்டுக்கு 61,200 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் இவை கோழி முட்டையாக உள்ளது. மிகப்பெரிய அளவில் பண்ணைகளை அமைத்து சீனர்கள் முட்டை உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்

இரண்டாவது இடத்தில் இந்தோனேசியா உள்ளது. இங்கு ஆண்டுக்கு 14,400 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக ஏராளமான பண்ணைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அரசு முட்டை உற்பத்தி தொழிலுக்கு மானிய தொகைகள் வழங்குவதால் பலரும் இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

முட்டை உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கோழி வளர்ப்பு என்பது நீண்ட காலமாக நல்ல தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இந்தியர்கள் முட்டையை விரும்பி சாப்பிடுவதால் இதற்கான தேவை இந்தியாவில் எப்போதுமே அதிகம் காணப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 14 ஆயிரத்து 200 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்

நான்காவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. இங்கு ஆண்டுக்கு சுமார் 11,100 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன