முத்த மழை - சின்மயி விடியோ வடிவம் வெளியீடு

முத்த மழை - சின்மயி விடியோ வடிவம் வெளியீடு
சின்மயி பாடிய முத்த மழை பாடலின் விடியோ...

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியானது.

படத்தின் கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் விமர்சன ரீதியாக படம் தோல்வியடைந்தது.

இப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சிவா ஆனந்த் எழுதிய முத்த மழை பாடல் சின்மயி குரலால் பெரும் கவனம் பெற்றது. ஆனால், படத்தில் விடியோ வடிவில் பாடல் பயன்படுத்தப்படவில்லை. இது ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் பாடகி தீ பாடிய பாடலின் விடியோவையும் வெளியிட்டனர்.

தீ குரலும் த்ரிஷாவின் நடிப்பும் சரியாகப் பொருந்தாததால் அப்பாடலும் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்தது.

இதையும் படிக்க: புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

இந்த நிலையில், சின்மயி பாடிய விடியோ வடிவத்தை வெளியிட்டுள்ளனர். இதைக் கேட்ட ரசிகர்கள், ஆறுதல் அளிப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.