எனக்கு இவ்ளோ காமெடி வராது, வேற காமெடியன் வச்சிக்கங்க: கமல் படத்தை மறுத்த பிரபல நடிகர்!

1944-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த டெல்லி கணேஷ் இந்திய விமானப்படையில் அதிகாரியாக வேலை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில், காமெடி, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து அசத்தியவர் டெல்லி கணேஷ். பல படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற இவர், எதிரி, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கேரக்டர்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். ஆனால் அவ்வை சண்முகி படத்தில் நடிக்கும்போது இந்த கதையில் நடிக்க மறுத்துள்ளார் டெல்லி கணேஷ்.
1944-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த டெல்லி கணேஷ் இந்திய விமானப்படையில் அதிகாரியாக வேலை செய்துள்ளார். அதன்பிறகு அதில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்து பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருந்தார்,
மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ் குறிப்பாக கே.பாலச்சந்தரின் உதவி இயக்குனராக இருந்த விசு இயக்கிய அனைத்து படங்களிலும் டெல்லி கணேஷ் முக்கிய கேரக்டர்களில் நடித்திருப்பார். அதேபோல் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், விசு இயக்கிய சிதம்பர ரசகியம், சுந்தர்.சி நடித்த தலைநகரம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். வில்லன் காமெடி என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ், கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், அவ்வை சண்முகி படம் ஓரிரு நாட்கள் நடித்தேன். அதில் நிறைய காமெடி காட்சிகள் வந்தது. இதனால் பயந்துபோன நான் எழுத்தாளர் கிரேஸி மோகனிடம் சென்று எனக்கு எத்தனை சீன் வருகிறது என்று கேட்டேன். அவரோ சீனா, படம் ஃபுல்லா நீ வரய்யா என்று சொல்ல, அப்படியா, இவ்வளவு பரிய காமெடி என்னால் பண்ண முடியுமாயா? நீபாட்டுக்கு எழுதிட்டு போற, இதுக்கு ஒரு நல்ல காமெடியனை வச்சிக்கோங்க என்று சொன்னேன்.
இதை கேட்ட கிரேஸி மோகன் இதை நீ கமல்ஹாசனிடம் போய் சொல் என்று சொல்ல, நான் கமல்ஹாசனிடம் சென்று, சார் இவ்வளவு பெரிய காமெடி என்னால் பண்ண முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் எதற்கும் வேறு ஒரு நல்ல ஆர்டிஸ்டா செலக்ட் பண்ணுங்க என்று சொன்னேன். உங்களுக்கு காமெடி பண்ண தெரியும் என்பது எனக்கு தெரியும். பண்ணுங்க என்று என்க்ரேஜ் பண்ணியது கமல்ஹாசன் தான். அவர் சொன்னதற்கு பிறகு ஒரு தைரியம் வந்தது பண்ண ஆரம்பிச்சேன். எல்லோரும் சிரித்தார்கள். நல்ல காமெடியாக வந்தது என்று கூறியுள்ளார்.