உயிர் உலக் போதுமா? விக்னேஷ் சிவனை பிரியும் நயன்தாரா? றெக்கை கட்டி பறந்த யூகங்கள்.. அவரே சொன்ன பதில்!

சென்னை: தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விவாகரத்து செய்யப் போவதாக கடந்த சில தினங்களாகவே செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் தானும் விக்னேஷ் சிவன் பிரிய போவதாக வெளியான செய்திகளுக்கு நயன்தாராவே மறைமுகமாக பதில் அளித்துள்ளார்
தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, உள்ளிட்ட படங்களில் ஹீரோயின் ஆகி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா.
தமிழில் விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், சிம்பு, அஜித், ஜெயம் ரவி என சீனியர் ஜூனியர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானார்.
பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகரான தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்திருந்த நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருமே ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த 2022 ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும் அந்த குழந்தைகளுக்கு உயிர் உலக் என பெயர் வைத்ததாக நயன்தாரா அறிவித்தார். ஆறு மாதங்களுக்குள் குழந்தை எப்படி என கடும் விமர்சனம் எழுந்த நிலையில், வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக நயன்தாரா விளக்கமளித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதார துறையும் விசாரணை நடத்தியது. விதிகளுக்கு உட்பட்டேதாங்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டதற்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இதேபோல சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது.
இது ஒருபுறம் இருக்க நயன்தாராவும் விக்னேஷ் சிவன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. மேலும் சில யூட்யூப் சேனல்களும் தொலைக்காட்சிகளும் அந்த செய்தியை உறுதிப்படுத்துவது போல செய்திகளை வெளியிட்டன. ஆனால் நயன்தாராவும், விக்னேஷ் சிவன் தொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் தான் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். புல் வெளியில் விக்னேஷ் சிவன் மேல் நயன்தாரா அமர்ந்திருப்பது போலவும், இருவரும் தூரத்தில் ஏதோ ஒன்றை ஆச்சரியத்துடன் பார்ப்பது போல அந்த புகைப்படம் இருக்கிறது. அதில் "எங்களை குறித்து வதந்திகளை பார்க்கும்போது எங்கள் ரியாக்சன்" என பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் தங்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை தாங்கள் பிரியப் போவதும் இல்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நயன்தாரா.