சென்னை மாநகராட்சியில் விலங்கு நல ஆர்வலர் பணி

சென்னை மாநகராட்சியில் விலங்கு நல ஆர்வலர் பணி
பெருநகர சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்படும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் மாதந்திர தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள விலங்கு நல ஆர்வலர் பணி

பெருநகர சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்படும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் மாதந்திர தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ள விலங்கு நல ஆர்வலர் பணிக்கு விலங்கு நல ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Animal Volunteers

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ. 30,000

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் விலங்குகள் பராமரிப்பு அல்லது விலங்குகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் தகுதியான விண்ணப்பத்தாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான இடத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அதனுடன் கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், பணி அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.