குழந்தைக்கு டயாபர் வாங்கவே இத்தனை ஆயிரமா? நகரத்துல குழந்தை வளர்க்க இவ்வளவு செலவாகிறதா?

குழந்தைக்கு டயாபர் வாங்கவே இத்தனை ஆயிரமா? நகரத்துல குழந்தை வளர்க்க இவ்வளவு செலவாகிறதா?
இந்தியாவில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் வாழ்க்கை செலவினங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

சென்னை: இந்தியாவில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் வாழ்க்கை செலவினங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. வீட்டு வாடகை தொடங்கி போக்குவரத்து செலவுகள் என பணம் தண்ணீர் போல செலவாகிறது.

பெரு நகரங்களில் கணவன் மனைவி என இரண்டு பேரும் வேலைக்கு சென்றால் கூட பட்ஜெட் போட்டு மட்டுமே பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு செலவினங்கள் அதிகரித்து இருக்கின்றன. குறிப்பாக வீட்டில் குழந்தை இருந்தால் செலவு பற்றி கூறவே வேண்டாம். சென்னை சேர்ந்த ஒரு தம்பதி மாதம் தோறும் தாங்கள் 78,000 ரூபாய் சம்பாதித்தாலும் 70 ஆயிரம் ரூபாய் அடிப்படை செலவுகளுக்கே சென்று விடுகிறது எங்களால் பணத்தை மிச்ச படுத்தி சேமிக்க முடியவில்லை என புலம்பி இருக்கின்றனர்..

சென்னையில் சேர்ந்த ஒரு தம்பதி ரெடிட் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் சென்னையில் நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம் , வீட்டில் நான் என் மனைவி மற்றும் 8 மாதம் முடிந்த குழந்தை இருக்கிறது, எங்களுக்கு மாதத்திற்கு 78,000 ரூபாய் சம்பளம் வருகிறது ஆனால் அதில் 8000 மட்டுமே எங்களால் சேமிக்க முடிகிறது என கூறி இருக்கின்றனர். வீட்டு வாடகை மற்றும் குழந்தைக்கான டே கேர் சென்டர்களுக்கு மட்டுமே 46 ,500 ரூபாயை நாங்கள் செலவு செய்ய வேண்டியது எனக் கூறியுள்ளனர்

சென்னையில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வீடு வாடகை வீடு வேண்டும் என்றால் கூட குறைந்தது 25,000 ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் இதுவே வீடு மெயினான இடத்தில் இருக்கிறது என்றால் வாடகை 30 ஆயிரத்திலிருந்து தான் தொடங்குகிறது. அதேபோல குழந்தைகளுக்கான டே கேர் சென்டர்களை பொறுத்தவரை சராசரியாக 15 ஆயிரம் ரூபாயை மாதம் தோறும் கட்டணமாக வசூல் செய்கிறார்கள். அந்த வகையில் இந்த தம்பதி தங்களுடைய சம்பளத்தில் பெரும்பாலான தொகையை வீட்டு வாடகைக்கும் குழந்தை பராமரிப்புக்கும் செலவு செய்கின்றனர்.

இது தவிர மளிகை பொருட்கள் மற்றும் பிற செலவுகளுக்காக மாதம் 10,000 ரூபாயை ஒதுக்கீடு செய்கிறார்களாம், போக்குவரத்து செலவுகளுக்கு 8,500 ரூபாய் ஆகிறதாம் குழந்தைக்கான டையப்பருக்கு மட்டும் ஒரு மாதத்திற்கு 3 ,000 ரூபாயை செலவு செய்வதாக தெரிவிக்கின்றனர். இது தவிர மின்சார கட்டணம் , சமையல் எரிவாயு கட்டணம் என பல்வேறு கட்டணங்களையும் செலுத்துவதால் தங்களுடைய சம்பளத்தில் கிட்டத்தட்ட 70,000 ரூபாய் வந்தவுடனே காலி ஆகிவிடுகிறது என அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த தம்பதியின் பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் தான் பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனரான மீனல் கோயல் இந்தியாவில் நகர் பகுதியில் குழந்தைகளை வளர்த்தெடுப்பது என்பது அதிக செலவு கொண்டதாக மாறியிருக்கிறது என கூறி இருந்தார். குழந்தை டெலிவரி தொடங்கி அந்த குழந்தை படித்து ஆளாகும் வரை சராசரியாக 38 லிருந்து 45 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என கூறியிருந்தார். குழந்தை வளர்ப்பு செலவுகள் அதிகரிப்பதால் பெரும்பாலான இளம் தம்பதிகள் குழந்தை வேண்டாம் என்ற முடிவுக்கு அல்லது தள்ளி போடலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர் என்றும் அவர் கூறுகிறார்