ரயிலில் இருக்கைகள் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது தெரியுமா..? 99% பேருக்கு தெரியாது..!

Train Seats: இந்திய ரயில்களில் ஏன் நீல நிறத்தில் இருக்கைகள் இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. இதற்கு பின்னால் சில சிறப்பு காரணங்கள் உள்ளன. அவை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நம் நாட்டில் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரிந்ததே. ஒவ்வொரு நாளும் ஒரு கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்திய ரயில்களில் ஏன் நீல நிறத்தில் இருக்கைகள் இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கு பின்னால் சில சிறப்பு காரணங்கள் உள்ளன. அவை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக, நீல நிறம் என்பது, அமைதி மற்றும் ரிலாக்சேஷனுடன் தொடர்புடையது. இந்த நிறத்தில் இருக்கைகள் இருப்பது அமைதியான பயண அனுபவத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், நீல இருக்கைகள் நீண்ட நேரம் சுத்தமாக இருக்கும். அத்துடன், இது அழுக்கு மற்றும் கறைகளை எளிதில் வெளியே காட்டாது.
மற்ற வண்ணங்களுடன் ஒப்பிடும்போது, நீலம் குறைந்த விலையில் கிடைக்கிறது. இது ரயில்வேக்கு நிதி ரீதியாகவும் பயனளிக்கிறது. மற்ற வண்ணங்களுடன் ஒப்பிடும்போது, நீல இருக்கைகளை அடையாளம் காண்பது எளிது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
நீல நிறம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்று கூறலாம். சில நாடுகளில், நீல விளக்குகளை நிறுவுவதன் மூலம் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில பேருந்துகளுக்குள் இருக்கும் இருக்கைகள் கூட நீல நிறத்தில் உள்ளன. நீல நிறம் நம் நாட்டில் ரயில்வேக்கு ஒரு வகையான அடையாளம் என்றும் கூறலாம்
நம் நாட்டில் மற்ற வண்ணங்களில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த நிறம் பொதுவான நிறமாக இருக்கிறது. இருப்பினும், பிரீமியம் ரயில்களில், அவற்றை தனித்துவமாக்க, மற்ற வண்ணங்களில் இருக்கைகள் நிறுவப்படுகின்றன. எதிர்காலத்தில் ரயில்வே துறையில் வேறு வண்ணங்களில் இருக்கைகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன