பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம்.. ரூ.8,779 கோடியில் பிரம்மாண்டம்.. 27.9 கிமீ தூரத்திற்கு மேம்பாலம்

பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம்.. ரூ.8,779 கோடியில் பிரம்மாண்டம்.. 27.9 கிமீ தூரத்திற்கு மேம்பாலம்
கோடியில் பிரம்மாண்டம்.. 27.9 கிமீ தூரத்திற்கு மேம்பாலம்

சென்னை: சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பரந்தூரில் 4 ஆயிரத்து 971 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பூந்தமல்லி- முதல் பரனூர் வரை மெட்ரோ ரயில் அமைக்கப்பட உள்ளது. இதன் ஒரு கட்டமாக பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் உயர்மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இந்தியாவின் பெருநகரங்களான மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் போன்ற பெருநகரங்கள் கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் மாறிக்கொண்டு, நகரம் வளரும் போதே, மிகப்பெரிய விமான நிலையத்தை கட்டி திறந்துவிட்டன. பெங்களூர், ஹைதராபாத் நகரங்கள், ஐடி தொழில் அசுர வளர்ச்சி அடைவதை கண்டு, உடனே விமான நிலையங்களை சரியான இடத்தில் அமைத்துவிட்டார்கள். ஆனால் சென்னையில் அப்படி அமைக்கப்படவில்லை.

ஏன் உடனே அமையவில்லை

பாரிஸ் கார்னரில் இருந்த பேருந்து நிலையத்தை கோயம்பேடுக்கும், கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாற்றுவதில் ஆர்வம் காட்டிய அரசுகள், பேருந்துநிலையம் போல் விமான நிலையத்தை உடனே மாற்ற முடிவெடுக்கவில்லை.. ஒருவேளை கடந்த 2000ம் ஆண்டுகளில் முடிவெடுத்திருந்தால், தாம்பரம் பக்கத்திலேயே அரசால் இடம் வாங்கியிருக்க முடியும். 2010ல் முடிவெடுத்திருந்தால் கூட, ஓஎம்ஆர் பகுதிகளில் நல்ல இடத்தை தேர்வு செய்திருக்க முடியும். இப்போது 2025ல் முடிவெடுத்தத காரணத்தால், சென்னை மற்றும் புறநகரில் எங்குமே இடம் இல்லாத அளவிற்குவளர்ந்துவிட்டது. இறுதியா காஞ்சிபுரம் பக்கத்தில் போய் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையின் 2வது விமான நிலையம்

இதன்படி, சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பரந்தூரில் 4 ஆயிரத்து 971 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. சென்னையின் 2-வது புதிய சர்வதேச விமானநிலையமாக இருக்கும் என்றாலும், இந்த விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், மீனம்பாக்கம் விமான நிலையம் தொடர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு.

குந்தம்பாக்கம் பேருந்து நிலையம்

தற்போது பரனூர் விமான நிலையத்திற்கு இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதல்கட்ட ஒப்புதலை அளித்துவிட்டன. அதேபோல் வேலூர் பெங்களூர், காஞ்சிபுரம் ஏரியாவில் இருந்து வரும் பேருந்துகளை கணக்கிட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில் 24.8 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.427 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது

பரந்தூர் விமான நிலையம்

பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பஸ் நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது சென்னையில் 2-ம் கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை- கலங்கரை விளக்கம் இடையே 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக மெட்ரோ ரெயில் வழித்தட திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியும்விட்டது.