நவம்பர் மாதம் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

நவம்பர் மாதம் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
நவம்பர் மாதம் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

சென்னை: ​மாற்​றுத் திற​னாளி​களுக்​கான அடை​யாள அட்டை வழங்​கும் முகாம்​கள் நவம்​பர் மாதத்​துக்கு பிறகு தொடங்​கப்​படும் என சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார் வடசென்னை மாவட்ட மாற்​றுத் திற​னாளி​கள் நல அலுவல​கத்​தின் மூலம் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மருத்​து​வர் சான்​றுடன் கூடிய அடை​யாள அட்டை வழங்​கும் முகாம், அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனை​யில் 2024-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் பிரதி மாதம் ஒவ்​வொரு வார வியாழக்​கிழமையும் நடை​பெற்று வருகிறது.

இந்​நிலை​யில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்தை முதல்​வர் தொடங்கி வைத்​துள்​ளார். இதன்​மூலம் தமிழகம் முழு​வதும் உள்ள கிராம, நகர்ப்​புற மக்​களின் இருப்​பிடம் நோக்கி அரசு திட்​டங்​கள் சென்​றடைய ஏது​வாக 10 ஆயிரம் முகாம்​கள் ஜூலை முதல் அக்​டோபர் வரை நடை​பெற உள்​ளன. சென்​னை​யில் 400 முகாம்​கள் நடை​பெறும்

மண்டல வாரியாக முகாம்: இந்த முகாம்​கள் மண்டல வாரி​யாக நடை​பெறும் என்​ப​தால் தற்​போது மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மருத்​து​வர் சான்​றுடன் கூடிய அடை​யாள அட்டை வழங்​கும் முகாம் மற்​றும் மக்​களு​டன் முதல்​வர் முகாம்​கள் வரும் நவம்​பர் மாதத்​துக்கு பிறகு பிரதி வாரம் வியாழக்​கிழமை முதல் தொடர்ந்து நடை​பெறும் என சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த்​ ஜகடே அறி​வித்​துள்​ளார்​.