பச்சிளம் பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்க முயற்சி: பெண் உள்பட 3 பேர் கைது

பச்சிளம் பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்க முயற்சி: பெண் உள்பட 3 பேர் கைது
பச்சிளம் குழந்தையை வாங்கிய சிந்து, அதனை விற்க முயற்சித்தார்.

ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் கவலை அடைந்தனர்.

பச்சிளம் குழந்தையை வாங்கிய சிந்து, அதனை விற்க முயற்சித்தார்.

கோவை:

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் 35 வயது பனியன் தொழிலாளி.

இவருக்கு 30 வயதில் மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பெண், 4-வதாக கர்ப்பம் ஆனார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு பிரசவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது கணவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு கடந்த 26-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர் கவலை அடைந்தனர். இதனால் அந்த பெண் குழந்தையை தத்து கொடுக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர்