கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப் பட்டா பிரிப்பது எப்படி.. ஆவணங்கள் அவசியம்! பட்டாவில் பெயர் மாற்றலாம்

கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப் பட்டா பிரிப்பது எப்படி.. ஆவணங்கள் அவசியம்! பட்டாவில் பெயர் மாற்றலாம்
பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது போலவே கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம்? கூட்டுப்பட்டா என்றால் என்ன?

சென்னை: பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது போலவே கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம்? கூட்டுப்பட்டா என்றால் என்ன? கூட்டுப் பட்டாவில் எப்படி பெயரை நீக்குவது தெரியுமா? தனிப்பட்டா என்றால் என்ன? கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவை பிரிப்பது எப்படி தெரியுமா? அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? கூட்டுப்பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய முடியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்

நிலத்தின் உரிமையாளருக்கு நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழே பட்டாகும்.. ஆனால், ஒரு நிலத்தின் வகை, உரிமையாளர் மற்றும் பயன்பாட்டை பொறுத்து பட்டா மாறுபடும்..

இதில் கூட்டுப்பட்டா என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட நில உரிமையாளர்களை கொண்டதுதான் கூட்டு பட்டா (joint patta) ஆகும்.. இதில், யார் யாருக்கு எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக பதிவாகியிருக்காது. மொத்தமாக எல்லோருடைய பெயர்களும் இடம்பெற்றிருக்கும். அதாவது உட்பிரிவு செய்யாமல் உள்ள நிலத்தில் உள்ள அனைவரும் உள்ளடக்கி ஆவணம்தான் கூட்டு பட்டா.

ஆனால், தனி பட்டாவில் (Individual Patta) தனிப்ப்டட நபரின் பெயர், சர்வே நெம்பர் உட்பிரிவு எண் போன்றவை தனித்தனியாக எழுதப்பட்டிருக்கும்..

தனிப்பட்டா பெற ஆவணங்கள்

இதில், கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெற வேண்டுமானால், குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும். நிலத்தை பகிர்ந்து தனியாக பட்டா பெறுவதற்கு, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் வேண்டும். பிரிக்கப்பட வேண்டிய பட்டாவிற்கான நிலத்தின் அளவு தெளிவாக வரையறுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிலம் உரிமைச் சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்..

தனி பட்டா பெற விண்ணப்பிக்க, தற்போதுள்ள கூட்டு பட்டா, முந்தைய பட்டா நகல் மற்றும் பரிசளிப்பு ஆவணம், விற்பனைச் சான்றிதழ், பகிர்வு உடன்படிக்கை, நில வரைபடம், சொத்து வரி செலுத்தப்பட்ட ரசீது, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, நில அளவை மேற்கோள்வதற்கான கோரிக்கை மனு, மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.

நில அளவை - உட்பிரிவு

இந்த ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்வார்கள். இறுதியில், எந்தவிதமான சிக்கலும் நிலத்தில் இல்லாதபட்சத்தில் 30 முதல் 60 நாளில் தனி பட்டா கிடைத்து விடும். ஒருவேளை, கூட்டு உரிமையாளர்களின் ஒப்புதல் தராவிட்டால், கோர்ட் மூலமாக, தனி பட்டா பெறலாம்.

நில அளவையின் போது, உட்பிரிவு செய்யப்படாமல் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் பெயரில் உள்ள நிலங்களுக்கு கூட்டுப் பட்டா வழங்கப்படுகிறது.

கூட்டுப் பட்டாவில் யார் விற்கிறார் என்று பார்த்து அவர் பெயர் நீக்கப்பட்டு, புதிதாக வாங்கிய நபரின் பெயர் சேர்க்கப்படும். விவசாய நிலமாக இருந்தவரை கூட்டுப் பட்டா நடைமுறையின் பயன்பாட்டில் சிக்கல் இருந்திருக்காது. ஆனால், குடியிருப்பு பயன்பாட்டுக்காக நிலங்கள் பாகங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் கூட்டுப் பட்டா தொடரும்போதுதான் சிக்கல் எழுகிறது.

கூட்டுப்பட்டா பெயர் மாற்றம்

ஒருவேளை கூட்டுப்பட்டாவில் பெயர் சேர்ப்பதானாலும், ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம். அதேபோல, சார் பதிவாளரிடம் சென்று உங்கள் பட்டாக்களின் பெயர்களை உடனடியாக மாற்றி கொள்ளலாம்..

கூட்டு பட்டாவில் ஒருவரின் பெயரை நீக்க, அந்த நபர் தனது ஒப்புதல் கடிதத்துடன், சம்பந்தப்பட்ட நில வருவாய் துறை அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.