பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம் ரகசியமாக நடைபெற்றது

பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம் ரகசியமாக நடைபெற்றது
பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம் ரகசியமாக நடைபெற்றது

பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம் ரகசியமாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற மாதாந்திர சாதாரண கூட்டம்  ரகசியமாக பேரூராட்சி தலைவர் சுந்தரிஅழகப்பன் தலைமையிலும் துணைதலைவர் கா. வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மு.செ.கணேசன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாக வாட்ச்அப் குழுவில் தெரிவித்துள்ளார்.அதில் என்ன கேள்விகளை உறுப்பினர்கள் கேட்டார்கள் அதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பதில் அளித்தார் என்பது அவருக்கும்,கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

 மேற்படி கூட்டத்தில் 15 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் சுமார் 17.75 லட்சத்தில் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், அம்ரூத் 2.0. திட்டத்தின் கீழ் 1335 லட்சத்தில் நிர்வாக அனுமதி வரபெற்ற மன்றத்தின் அனுமதி வழங்கியதாகவும், பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கத்திற்கு வருவாய் துறை மூலம் இடம் கோருவது பிறப்பு இறப்பு பதிவு வரவு செலவு உள்ளிட்ட  16 பொருட்கள் விவாதிக்கப்பட்டதாகவும் இதில் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் செய்தியாளர்கள் வாட்ச் அப் குரூப் தளத்தில்   பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் பதிவிட்டுள்ளார்.அதில் எவ்வளவு உண்மைத்தன்மை உள்ளது என செய்தியாளர்களை கூட்டத்திற்கு அனுமதிக்காததால் கூட்டத்தில் இருந்த உறுப்பினர்களை தவிர மற்றவர்களுக்கு தெரியவில்லை. எனவே வரும் காலங்களில் பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியாளர்களை அனுமதிக்குமாறு செய்தியாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.