இந்தியாவால் எங்களுடைய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா?- பாகிஸ்தான் அமைச்சர் பதில்..!

இந்தியாவால் எங்களுடைய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா?- பாகிஸ்தான் அமைச்சர் பதில்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மே 9 ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின்போது பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மே 9 ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு விமானம், AWACS (Airborne Warning and Control System) என அழைக்கப்படும் வான்வழி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய ராணுவம் வசம் உள்ள ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

மே 7 தாக்குதலின் போது பயங்கரவாத இலக்குகள் சேதமடைவதன் முன்னாள் இருந்த நிலை மற்றும் அதன் பின்னால் சேதமடைந்த நிலை ஆகியவற்றின் செயற்கைக்கோள் படங்களையும் அவர் திரையிட்டு விளக்கினார். ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு கூறுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் பாகிஸ்தானின் சிங்கிள் விமானம் தாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என்ற பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பதில் அளித்துள்ளார்.

மேலும், 3 மாதங்களாக இது தொடர்பாக இந்தியா ஏதும் கூறவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் உடனடியாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு விரிவான தொழில்நுட்ப விளக்கங்களை அளித்தது எனத் தெரிவித்தார்.

ஆபரேசன் சிந்தூரின்போது இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்ட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது