மாநகராட்சியை கண்டித்து காரைக்குடியில் 15-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மாநகராட்சியை கண்டித்து காரைக்குடியில் 15-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

.மு.க.வைச் சேர்ந்த காரைக்குடி மாநகராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், முன்னிலையிலும் நடைபெறும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், தி.மு.க.வைச் சேர்ந்த காரைக்குடி மாநகராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும்; மாநகராட்சி மேயரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், காரைக்குடி மாநகராட்சி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க.வின் ஸ்டாலின் அரசையும்; காரைக்குடி மாநகராட்சி மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்