ரயில் பயணிகள் கவனத்திற்கு... ஜூலை மாதம் முழுவதும் ராமேஸ்வரம் ரயில்கள் ரத்து..!!

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக் குடியில் நடைபெற்று வரும் ரயில் இருப்புபாதை பராமரிப்பு பணியால் ஜூலை 1-ம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் வரும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆன்மீக மற்றும் சுற்றுலா ஸ்தலமாக விளங்குவதால் தினமும் நாடு முழுவதிலும் இருந்து ரயில் மூலமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி ரயில் நிலையத்தில் இருப்புப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பகல் நேரத்தில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு மதியம் 11:50 மணிக்கு புறப்பட்டு பயணிகள் ரயில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. கூடுதலாக ஆடி அமாவாசை அன்று இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2:50 மணிக்கு திருச்சி புறப்படும் ரயில் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடி அமாவாசை மட்டும் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் மற்றும் நாட்கள் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டும் இயங்கும்.
ராமேஸ்வரத்தில் இருந்து சாரலபள்ளிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் ஜூலை 4, 11, 18, 25 காலை 9:00 மணிக்கு புறப்பட்டு ரயில் தாமதமாக மாலை 7:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது