மத்திய வெளியுறவு துறை அமைச்சக முயற்சியால் ஈரானில் சிக்கிய 15 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்

மத்திய வெளியுறவு துறை அமைச்சக முயற்சியால் ஈரானில் சிக்கிய 15 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்
மத்திய வெளியுறவு துறை அமைச்சக முயற்சியால் ஈரானில் சிக்கிய 15 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்

சென்னை: ஈ​ரான் நாட்​டில் சிக்​கித் தவித்த தமிழக மீனவர்​கள் 15 பேர் மத்​திய வெளி​யுறவுத் துறையின் முயற்​சி​யால் மீட்​கப்​பட்டு சென்னைக்கு அழைத்து வரப்​பட்​டனர். சென்னை விமான நிலை​யத்​தில் அவர்​களை வரவேற்ற தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அனைத்து செல​வு​களை​யும் தமிழக பாஜக ஏற்​றுள்​ள​தாக தெரி​வித்​தார். ஈ​ரானில் சிக்​கித் தவித்த தமிழகத்​தின் திருநெல்​வேலி மாவட்​டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்​கள், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகத்​தின் மூலம் மீட்​கப்​பட்​டனர்.

ஈரானிலிருந்து கப்​பலில் துபாய் வந்த அவர்​கள், அங்கிருந்து விமானம் மூலம் டெல்​லிக்​கும் அங்​கிருந்து ஏர் இந்​தியா விமானம் மூலம் நேற்று முன்​தினம்சென்​னைக்​கும் வந்​தனர். சென்னை விமான நிலை​யத்​தில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மீனவர்​களை வரவேற்​றார். பின்​னர் பாஜக ஏற்​பாடு செய்த வாக​னங்​கள் மூலம், திருநெல்​வேலிமாவட்​டம் உவரிக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

முன்​ன​தாக சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் மீனவர்​கள் கூறிய​தாவது: நாங்​கள் மீன்​பிடித் தொழிலுக்​காக கடந்த பிப்​ர​வரி மாதம் ஈரானுக்கு சென்​றோம். அங்கு போர்நடந்​த​தால், எங்​களால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடிய​வில்​லை.உணவுக்கு மிக​வும் கஷ்டப்​பட்​டோம். போரால் எங்​களுக்கு நேரடியாக எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை.

ஆனால் நாங்​கள் தங்​கி​யிருந்த இடம் அரு​கில் குண்​டு​கள் வெடிப்​பது, எங்​கள் தலைக்கு மேலே ஏவு​கணை​கள் செல்​வது மிகுந்த அச்​சத்தை ஏற்​படுத்​தி​யது. ஈரான் நாடு முழு​வதுமே ஜிபிஎஸ் கருவிகள் வேலை செய்​ய​வில்​லை. ஜிபிஎஸ் கருவி இல்​லாமல் கடலுக்கு மீன் பிடிக்​கச் செல்ல முடி​யாது. இதனால் நாங்​கள் இந்​தியாதிரும்ப முடிவு செய்​தோம்.

திருநெல்​வேலி​யில் உள்ள எங்​கள் குடும்​பத்​தினர், பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மூலம் முயற்​சிகளை மேற்​கொண்​டனர். பின்​னர் இந்​திய வெளி​யுறவுத் துறை மூலம் நாங்​கள் மீட்​கப்​பட்​டு, ஈரானிலிருந்து கப்​பலில் துபாய் வந்​தோம். அங்குசில நாட்​கள் தங்க வேண்​டிய நிலைஏற்​பட்​டது.

அதன் பிறகு துபா​யி​லிருந்து விமானத்​தில் டெல்​லிக்​கும், டெல்​லியி​லிருந்து இப்​போது சென்​னைக்​கும் வந்​திருக்​கிறோம். எங்​களை பத்​திர​மாக மீட்டு அழைத்து வர உதவிய பிரதமர் மோடி, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆகியோ​ருக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறோம் என்று கூறினர்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறுகை​யில், “இந்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் முயற்​சி​யால், இந்த மீனவர்​கள் ஈரானில் தங்​கி​யிருந்த தீவுக்​கு, இந்​திய தூதரக அதி​காரி​கள் நேரடி​யாக சென்​று, இவர்​களை மீட்டு துபாய்க்கு கப்​பலில் அனுப்பி வைத்​தனர். அங்​கிருந்து சென்​னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் 15 திருநெல்வேலி மாவட்டம் மீனவர்கள் ஈரானில் மற்றொரு தீவில் இருக்கின்றனர். அவர்களையும் மீட்டு அழைத்து வருவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த ஓரிரு தினங்களில் அவர்களும் இந்தியா திரும்புவார்கள். இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக பாஜக ஏற்றுக்கொண்டுள்ளது'' என்றார்