கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடுகிறார் மோடி

கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடுகிறார் மோடி
கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடுகிறார் மோடி

அரியலூர்: கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் இன்று (ஜூலை 27) நடை​பெறும் ஆடி ​திரு​வா​திரை விழா​வில் பங்​கேற்​கும் பிரதமர் மோடி, ராஜேந்​திர சோழன் உரு​வம் பொதித்த நாண​யம் வெளி​யிடு​கிறார்.

அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில், மத்​திய கலா​ச்சா​ரத் துறை சார்​பில் ராஜேந்​திர சோழனின் பிறந்த நாளான ஆடி திரு​வா​திரை விழா, கங்​கை​கொண்ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயில் கட்​டத் தொடங்​கிய ஆயிர​மாவது ஆண்டு விழா, தென்​கிழக்கு ஆசிய நாடு​களின் மீது படையெடுத்​துச் சென்ற ஆயிர​மாவது ஆண்டு நிறைவு விழா என முப்​பெரும் விழா நடை​பெற்று வரு​கிறது.

இன்று நடை​பெறும் நிறைவு விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். இதற்​காக ராணுவ ஹெலி​காப்​டர் மூலம் பொன்​னேரி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள ஹெலிபேடுக்கு வரு​கிறார். அங்​கிருந்து காரில் ரோடு ஷோவாக கோயிலை வந்​தடைகிறார். கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​யும் பிரதமர், அங்​குள்ள சிற்​பங்​கள், கலாச்​சா​ரத் துறை சார்​பில் அமைக்​கப்​பட்​டுள்ள புகைப்பட கண்​காட்​சி​யைப் பார்​வை​யிடு​கிறார். தொடர்ந்​து, ராஜேந்​திர சோழன் நினைவு நாண​யம், திரு​வாசகம் உரைநடை நூலை வெளி​யிடு​கிறார்.

36 ஆதீனங்​கள் பங்​கேற்பு: விழா​வில் பங்​கேற்​கும் பிரதமர் மோடியை, சைவ சித்​தாந்த மடங்​களைச் சேர்ந்த 36 ஆதீனங்​கள் மற்​றும் மடா​திப​தி​கள் சந்​தித்து ஆசி வழங்​கு​கின்​றனர். முன்​ன​தாக, பிரதமரை தமிழக அரசு சார்​பில் அமைச்​சர் எஸ்​.எஸ்​. சிவசங்​கர் மற்​றும் சிதம்​பரம் எம்​.பி.​யான திரு​மாவளவன், மாவட்ட ஆட்​சி​யர் பொ.ரத்​தின​சாமி உள்​ளிட்​டோர் வரவேற்​கின்​றனர். பிரதமர் வரு​கை​யையொட்டி 3,000 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டு உள்​ளனர்.