மின்சார வாரியத்திற்கு தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்...
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து அக்சயலட்சுமி என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
கடந்த காலங்களில் முதலமைச்சர் மிகக்குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்குவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 401 பேருக்கும் முதலமைச்சர் விஜய் தமது கரங்களால் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய், மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பணி ஆணைகளை பெற்றவர்களுடன் ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் மின்சாரத்துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக பணி ஆணைகளை பெற்றவர்கள் தெரிவித்தனர்.


TharaRaj

