மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 6-ந் தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்தபாடில்லை.

மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விலை சற்று குறையத் தொடங்கியது.
அந்தவகையில் நேற்றும் விலை சரிந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 375-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 295-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.126-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மேலும் சரிவை சந்தித்துள்ளது. இதன்படி இன்று தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,290க்கும், சவரனுக்கு ரூ.40 மட்டும் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.74,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320 (இன்று)
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360 (நேற்று)
11.08.2025 - ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760


Yasmin fathima

