வீட்டில் சுயநினைவின்றி கிடந்த இலக்கியா எப்படி இருக்கிறார்?

சென்னை: தன்னை ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி அதிகளவு ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படும் இலக்கியா, எப்படி இருக்கிறார் என்பதை பார்க்கலாம். அது போல் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டாரா என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
டிக்டாக், இன்ஸ்டா பிரபலம் இலக்கியா. அரைகுறை ஆடை, கவர்ச்சியான உடல் அசைவுகள், உடைகள் அணிந்திருந்த டிக்டாக் இலக்கியா, சமையல் சேனலை தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 6 ஆண்டுகளாக சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயனுடன் தொடர்பில் இருந்து வந்தது தெரியவருகிறது. இலக்கியா அண்மையில்தான் காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டி கிரகபிரவேசம் செய்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும்தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான். 6 ஆண்டுகளாக அவன் கூட நான் இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்ககூட பழக்கம். அதைத் தட்டிக் கேட்ட என்னை போட்டு அடிக்கிறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால் முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடிஅடினு அடிப்பான்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஸ்டோரியில் திலீப்பின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். கோட், வலிமை உள்ளிட்ட படங்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த தீலப் மீது இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்டது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது..
இந்த நிலையில், இலக்கியா, அந்த இன்ஸ்டா ஸ்டோரியை திடீரென டெலிட்டும் செய்துவிட்டார். இதையடுத்து நேற்று மதியம் காட்டுப்பாக்கம் வீட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது. இதையடுத்து ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவருடன் இருந்த நபர், இலக்கியா தூக்கிக் கொண்டு போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் அதிக மது போதையில் இருப்பதாகவும், நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதாகவும் தெரிவித்தனர்.
எனவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதென்றாலும் செல்லுங்கள் என்றனர். ஆனால் இலக்கியாவுடன் வந்த நபர், இந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை கொடுங்கள் என சொல்லி விட்டாராம்.
இதனிடையே திலீப் சுப்பராயன், எனக்கும் இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை இதில் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இலக்கியாவுக்கு இன்று இரண்டாவது நாளாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அவரது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து மருத்துவமனை தரப்பிலோ அல்லது இலக்கியா தரப்பிலோ எந்த தகவலும் வரவில்லை.