தமிழ்நாட்டின் இரண்டு சூப்பர் சுற்றுலா தலங்கள் ..

தமிழ்நாட்டின் இரண்டு சூப்பர் சுற்றுலா தலங்கள் ..
ஆனால் அது கேரளாவிற்கு கோடிகளை அள்ளித்தருது

தேனி: தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுக்கு தமிழ்நாட்டில் பாதையே கிடையாது. ஆனால் அது தான் கேரளாவிற்கு வருமானத்தை அள்ளித்தரும் முக்கிய சுற்றுலா தலமாக இருக்கிறது. அந்த சுற்றுலா தலங்களில் ஒன்று உலகப்புகழ் பெற்றது. இரண்டுமே தேனி மாவட்டத்தில் தான் இருக்கிறது. தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் அண்டை மாவட்டங்கள் ஆகும். இரு மாவட்ட எல்லையில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி பார்ப்போம்

தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் மலையாள வாடை சற்று அடிக்கும்.. குறிப்பாகசொல்வது என்றால், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தென்காசி போன்ற பகுதிகளில் மலையாளம் பேசுவோரை அதிகமாக பார்க்க முடியும். ஆனால் தேனி மாவட்டத்தில் மட்டும் சற்று வித்தியாசமானது..

இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம், பீர்மேடு, குமுளி, மூணாறு, கட்டபணை போன்ற பகுதிகள் ஆரம்பிக்கும் போது மலையாளத்தை பார்க்க முடியும். எனினும் அங்கு தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர். இடுக்கி மாவட்டத்தின் பாதி பகுதிகள் தமிழர்கள் அதிகம் உள்ள பகுதியாகும். கேரளாவில் காந்தளூர், மறையயூர், மூணாறு முதல் அப்படியே குமுளி தாண்டி வண்டி பெரியாறு வரை தமிழகர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளார்கள்..

இடுக்கி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள்

இப்போது விஷயத்திற்கு வருவோம். இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தேக்கடி, கோட்டயம் அருகே உள்ள வாகமனுக்கு பலரும் சுற்றுலா செல்வார்கள்.. ஆனால் இடுக்கி மாவட்டம் முழுமையான மலை மாவட்டம் என்பதால், பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அந்த வகையில் யார் மூணாறு, வாகமன், தேக்கடி சென்றாலும், மிஸ் பண்ண விரும்பாத இடங்கள் என்றால், டாப் ஸ்டேனும், கொழுக்குமலையும் தான். மூணாறில் உள்ள டாப் ஸ்டேஷன் தமிழ்நாட்டின் எல்லை பகுதியாகும்..

டாப் ஸ்டேஷன்

இது குரங்கணி அருகில் உள்ள கொட்டக்குடி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியாகும். குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷனுக்கு நடந்தே சென்றுவிட முடியும். ஆனால் வனத்துறை அனுமதி வாங்கித்தான் போக வேண்டும். ஏனெனில் பாதை கிடையாது. 2மணி நேரத்தில் நடந்து செல்ல முடியம். வாகனத்தில் செல்வதென்றால், கிட்டத்தட்ட 100 கிமீ சுற்றி செல்ல வேண்டும். அதற்கு கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு மேல் ஆகும். டாப் ஸ்டேஷன் வியூ பாயிண்ட் மூணாறில் ஏக பிரபலம். பலர் அங்கு தினசரி சுற்றுலா வந்து செல்கிறார்கள்.

கொழுக்குமலை தேயிலை தோட்டங்கள்

அடுத்ததாக கொழுக்குமலை.. இதுவும் தேனி மாவட்டம் குரங்கணி அருகே பகுதி தான். அந்த பக்கம் டிரெக்கிங்போனால் டாப் ஸ்டேஷன் வரும்.. அப்படியே இன்னாரு மலையில டிரெக்கிங் சென்றால் கொழுக்குமலை போய்விடலாம். கொழுக்குமலைக்கு வாகனத்தில் போகவேண்டும் என்றால், நேராக போடிமெட்டு தாண்டி, சூரிய நெல்லி போக வேண்டும். அங்கிருந்து அதற்கு என்று உள்ள ஜீப்பில் சுற்றுலா செல்லலாம். கொழுக்குமலைக்கு சுற்றுலா செல்ல பலரும் விரும்புவார்கள்.

கொழுக்குமலை சூரிய உதயம்

காரணம்...உலகின் மிக உயரமான மலையில் தேயிலை தோட்டங்கள் இருக்கும். தேயிலை தொழிற்சாலை அங்கு உள்ளது. அதை பார்க்க விரும்புவார்கள். அதேபோல் கொழுக்குமலையில் மிக முக்கியமானது சூரிய உதயம்.. அதிகாலையில் சூரியனின் உதயத்தை காண்பது என்பது வாழ்நாள் வரம் பலருக்கு.. ஏனெனில் அந்த அளவிற்கு அற்புதமான அனுபவம் தரும். அதிகாலை பனியில் மலையில் மலரும் சூரியன், காண்பதற்கே அருமையாக இருக்கும். அதேபோல் அங்கு இரவில் தங்குவதும் அருமையாக இருக்கும். அதேபோல் தேவாரம் மேல உள்ள கேரள எல்லையில் உள்ள சாந்தாம்பாறையும் பலருக்கும் பிடித்த இடம் ஆகும்..