Ration Card : அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இனி 2 கிலோ கோதுமை இலவசம்.. வெளியான அதிரடி அறிவிப்பு

Ration Card : அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இனி 2 கிலோ கோதுமை இலவசம்.. வெளியான அதிரடி அறிவிப்பு
கோதுமை இலவசம்.. வெளியான அதிரடி அறிவிப்பு

Ration Shop : தமிழகம், புதுச்சேரி என அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் பொருட்கள் மீதான அறிவிபபுகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களை, சந்தை விலையை விடக் குறைந்த விலையில் வாங்க முடியும். ரேஷன் திட்டம் குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு, உணவுப் பொருட்களை வாங்குவதில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

.தமிழகம், புதுச்சேரி என அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் பொருட்கள் மீதான அறிவிபபுகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. புதுச்சேரி அரசு கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்

ஆனால் 4 மாதமாகியும் இலவச கோதுமை வழங்கவில்லை. இந்த நிலையில் பாகூர் கிராமத்தில் பேருந்து நிலைய திறப்பு விழாவில் பேசிய அவர், இந்த மாதம் முதல் இலவச கோதுமை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

மேலும் புதுச்சேரியில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றோம். பணத்திற்கு பதிலாக மக்கள் விருப்பப்படி இலவச அரிசி போடப்பட்டு வருகிறது. கோதுமை வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் குடிமை பொருள் வழங்கல் துறை சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சிவப்பு அட்டைதார்களுக்கு தலா 20 கிலோ அரிசி,வறுமைகோட்டிற்கு மேல் வாழும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இலவச அரிசியுடன் கோதுமை வழங்கப்படும் என மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவித்தார். இந்த மாதம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.