கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் பெறுவது எப்படி? திருப்பூர் கலெக்டர் விளக்கம்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் பெறுவது எப்படி? திருப்பூர் கலெக்டர் விளக்கம்
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட ஏழை மக்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்த்தி்ல் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 325 முகாம்கள் நடக்க உள்ளது. இந்த முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு பொதுமக்கள் நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று அதே முகாம்களில் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறியுள்ளார்

21 வயது நிரம்பிய ஏராளமான குடும்ப பெண்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட ஏழை மக்கள் பிழைக்க வந்த ஊர் ஆகும். தமிழ்நாட்டில் பல ஏழை தொழிலாளர்களுக்கு வாழ்வழிப்பது திருப்பூர் தான். தமிழ்நாட்டின் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வேகமாக வளரும் நகரமாக திருப்பூர் தான் இருக்கிறது. திருப்பூரில் பல லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அதேபோல் திருப்பூரில் ரேஷன் கார்டு மாற்றாமல் வசிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர்.

அவர்களுக்கு எல்லாம் நல்ல வாய்ப்பு வந்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்தால் ஒரே நாளில் ரேஷன் கார்டு முகவரி மாற்றித்தரப்படும். அடுத்தாக மகளிர் உரிமை தொகைக்கு எளிதாக அங்கேயே விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கவும் முடியும். மகளிர் உரிமை தொகை பெற பல்வேறு தளர்வுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமான வரி கட்டும் குடும்ப உறுப்பினர்கள் இல்லாத குடும்பத்தினருக்கு எளிதாக கிடைக்கும். அதேபோல் குடும்ப உறுப்பினர்கள் யார் பெயரிலும் நான்கு சக்கர வாகனங்கள் இருக்கக்கூடாது. இந்த இரண்டு விதிதான் பிரதானமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இதனிடையே உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்பாக திருப்பூர் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சிதம்பரத்தில் தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்த்தி்ல் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 325 முகாம்கள் நடக்க உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 2 மண்டலத்துக்குட்பட்ட 6, 18, 32 ஆகிய வார்டுகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) திருப்பூர் தியாகி குமரன் காலனி, குமரன் கூட்டுறவு வங்கி வளாகத்திலும், காங்கயம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 3, 4, 9 ஆகியவற்றுக்கு கே.வி.ஏ. மஹாலிலும், அவிநாசி நகராட்சிக்குட்பட்ட 13, 14, 15 வார்டுகளுக்கு தேவந்திரகுல வேளாளர் திருமண மண்டபத்திலும், கொமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 8 வார்டுகளுக்கு உடுமலைப்பேட்டை பழனிசாலை வாசவி கன்னிகா பரமேஸ்வரி மண்டபத்திலும், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொன்னாபுரம், பொட்டிகம்பாளையம் ஊராட்சிகளுக்கு கோவிந்தாபுரம் குமரப்ப வேளாளர் மண்டபத்திலும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அணிக்கடவு ஊராட்சிக்கு அணிக்கடவு எஸ்.எச்.ஜி. கட்டிடத்திலும் நடைபெற உள்ளது

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு பொதுமக்கள் நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று அதே முகாம்களில் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.