இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
விளம்பி நாகனார்

நான்மணிக்கடிகை 

பாடல் - 021

"மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்

பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் - பெய்த

கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்

கூடார்கண் கூடி விடின்"

                                                -விளம்பி நாகனார்

விளக்கம்:

ஒற்றுமை இன்மை ஒருவனது வலிமையை ஒழிக்கும். பொய் பேசும் பண்பு உடம்பை அழிக்கும். பால் வைக்கப்பட்ட அசுத்தமான பாண்டம் பாலின் சுவையைக் கெடுத்துவிடும். அது போன்று தீய நட்பு தன் குலத்தையே அழித்து விடும்.