திருநயினார்குறிச்சியில் நேதாஜி நற்பணி மன்றத்தின் 39-வது ஆண்டு சுதந்திர தின விழா

திருநயினார்குறிச்சியில் நேதாஜி நற்பணி மன்றத்தின் 39-வது ஆண்டு சுதந்திர தின விழா

நேதாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் 39-வது ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மன்றத் தலைவர் திரு. ராஜன் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, வணிகவியல் துறைத் தலைவர், பயோனியர் குமாரசுவாமி கல்லூரி, நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கத் தலைவர், தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புறையாற்றினார்.

 உரையில் அவர் “நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பொருளாதார ரீதியாக அவர்களை முன்னேற்றுவதும் அவசியம். இளைஞர்கள் வளர்ந்தால் குடும்பம் வளரும்; குடும்பங்கள் வளர்ந்தால் மாவட்டம் வளரும்; மாவட்டங்கள் வளர்ந்தால் மாநிலம் வளரும்; மாநிலங்கள் அனைத்தும் வளரும்போது இந்தியா விரைவில் ஒரு வளர்ந்த நாடாக உயர்வடையும்” என்று தெரிவித்தார்.

மேலும், சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, ஒவ்வொருவரும் தங்களது திறமையையும் உழைப்பையும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விழாவில் மன்ற செயலாளர் திரு. B. ஷஜகுமார் வரவேற்புரை வழங்கினார். மன்ற உறுப்பினர் திரு. M. வினோத் குமார் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். மன்ற செயற்குழு உறுப்பினர் திரு. அஜுகுமார் நன்றியுரை வழங்கினார்.

தேசப்பற்று, இளைஞர் முன்னேற்றம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்திய இவ்விழா சிறப்பாக நிறைவடைந்தது.