முதலிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் 80வது சுதந்திர தின விழா

முதலிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் 80வது சுதந்திர தின விழா

சூலூர்: மக்கள் தலைவர் அண்ணாமலை, Ex-IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முதலிபாளையம் பேரூராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பால்வாடி குழந்தைகளுக்கு வாட்டர் பாட்டில், நோட்டு புத்தகங்கள், பென்சில்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், விழாவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாணவ, மாணவிகளுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் சூலூர் சட்டமன்றத் தொகுதி We The Leaders தன்னார்வலர் முதலிபாளையம் முரளி, கருமத்தம்பட்டி நகராட்சி We The Leaders K. பேச்சிமுத்து, அங்கப்பன், சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர்.

மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்களும், பள்ளி ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

“சுதந்திரத்தை கொண்டாடுவோம்; மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவோம்!”

— K. பேச்சிமுத்து தன்னார்வலர், We The Leaders கோவை வடக்கு மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சி