ஆனைப்பொத்தை புத்தேரியில் இலவச ஹோமியோபதி மற்றும் ஆங்கில முறை மருத்துவ முகாம்
நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கம் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நற்பணி மன்றம் இணைந்து, ஓயிட் மெம்மோரியல் ஹோமியோ மருத்துவக்கல்லூரி மற்றும் ஓயிட் மிஷன் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இலவச ஹோமியோபதி மற்றும் ஆங்கில முறை மருத்துவ முகாம் ஆனைப்பொத்தை, புத்தேரி சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கத் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக
நாகர்கோவில் மாநகராட்சி
மேற்கு மண்டலத் தலைவர்,
திரு. செல்வகுமார், கலந்து கொண்டார்.
முகாமை ஆனைப்பொத்தை ஊர் தலைவர் திரு மகேஷ் ஒருங்கிணைத்தார்.
முகாமில் பொதுமக்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பாக மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கம் சார்பாக திரு. கண்ணன் மற்றும் திரு. ராஜகோபால் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி நடைபெற்ற இம்மருத்துவ முகாம், ஆனைப்பொத்தை, புத்தேரி பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பான சமூக சேவை நிகழ்வாக அமைந்தது.



