பாதுகாப்பு அலுவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பாதுகாப்பு அலுவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருப்பத்தூா் மாவட்டத்தில் பாதுகாப்பு அலுவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

****AGNISIRAGU****

திருப்பத்தூா் மாவட்டத்தில் பாதுகாப்பு அலுவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் குடும்ப வன்முறை சட்டம் 2005-ன் படி பாதுகாப்பு அலுவலா் (பெண்) பணியிடம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது

.இதற்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சமூகப்பணி உளவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தினை வருகிற 18-ஆம் தேதிக்குள் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமா்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

****AGNISIRAGU****