ருத்ரா நாட்யாலயாவின் சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்ற விழா

ருத்ரா நாட்யாலயாவின் சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்ற விழா

13 ஆகஸ்ட் 2023 அன்று ருத்ரா நாட்யாலயாவின் பதிமூன்றாவது சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்ற விழா நாகர்கோவில் சுமங்கலி மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியை ஹிந்து கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியை ஸ்வர்ண லதா ராஜு அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தவப்புதல்வி அமைப்பின் நிறுவனர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை பாரம்பரிய கலையில் பாரதத்தின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார், சூரியன் பண்பலையின் மூத்த அறிவிப்பாளர் விஜி பூர்ண சிங், அருணாச்சலா பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் சிவரானி , எழுத்தாளர் குமரி உத்ரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு செய்தார்கள். வயோலின் வித்தகர் நாதன் மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி கிருஷ்ணன் அவர்கள் இசையில் அமிர்த வர்ஷினி அவர்களின் குரலில் இனிதே இன்னிசை முழங்கி நடன பள்ளி மாணவிகள் ஹர்ஷிதா, பவாதியா, தனுஸ்ரீ, காஜல், லஜு அவர்களின் அரங்கேற்றம் மற்றும் அதை தொடர்ந்து ஆப்ரியா, கிறிசி மொரீனா, தியன்ஷிஷா, ஜோஷ்னா கிரிகோரி, அமல் இஷானா ஜெரின் ஆகியோரின் சலங்கை பூஜையும் அரங்கேறியது .

இதில் மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் அனைவோரும் மகிழ்வோடு பங்குபெற்று மாணவர்களை வாழ்த்தினர். ருத்ரா நாட்யாலயாவின் நிறுவனர் மற்றும் ஆசிரியை நட்டுவாங்க கலைமணி நிர்மலா விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜையை வெற்றிகரமாக நடத்தி இறுதியில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.