மகளிர் உரிமை தொகை மட்டுமா.. இந்த குடும்பங்களுக்கு ரூ.4000 வரை கிடைக்கும் வாய்ப்பு.. எப்படி பெறுவது?

மகளிர் உரிமை தொகை மட்டுமா.. இந்த குடும்பங்களுக்கு ரூ.4000 வரை கிடைக்கும் வாய்ப்பு.. எப்படி பெறுவது?
தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், மேலும் 3 திட்டங்கள் மூலம்

சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், மேலும் 3 திட்டங்கள் மூலம் கூடுதலாக 3 ஆயிரம் பெறவும் தமிழ்நாடு அரசு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில், மகளிருக்கான உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வெறும் பத்து நிமிடங்களில் அனைத்து பணிகளும் முடித்துத் தரப்படுகின்றன. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்

மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதி இருந்தும் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த உறுதிமொழியினை அளித்துள்ளார்.

இந்த முகாம்களில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானவை. இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, எளிய முறையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வேறு ஆவணங்கள் இதற்கு கேட்கப்படவில்லை.

புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம்

மகளிர் உரிமை தொகை போக.. அரசுப் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, கூடுதலாக ரூ.2,000 வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பத்தில் அப்படிப்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் இந்த உதவி வழங்கப்படுகிறது.

புதுமைப் பெண் திட்டத்தைப் போலவே, மாணவர்களுக்கான ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் கடந்த சில மாதங்கள் முன் தமிழகத்தில் தொடங்கப்பட்டதுகடந்த ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றப்பட்டது.

இதன்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, இளங்கலை படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியதில்லை; நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது...

தமிழ் புதல்வன் திட்டம் - மாணவர்களுக்கான உதவி

இது போக மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, தமிழக அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டங்களின் மூலம் தகுதியான பயனாளிகள் உரிய முறையில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இது போக உங்கள் வீட்டில் வயதான நபர்கள் இருந்தால் முதியோர் ஓய்வூதியம் அவர்கள் பெற முடியும். முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.1000 பெறும் மூத்தக்குடிமக்கள் உங்கள் வீட்டில் இருந்தால் மொத்தமாக உங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்...