இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

திருக்குறள் -விருந்தோம்பல் அதிகாரம்

குறள் எண்: 86

"செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்  

 நல்விருந்து வானத் தவர்க்கு "

                                           -   திருவள்ளுவர்

 குறள் விளக்கம் :

            வந்த  விருந்தினரை போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்து இருக்கின்றவன் வானுலகத்தில் உள்ள தேவர்களுக்கும் நல்ல விருந்தினன் ஆவான்.