குற்றச்சாட்டுகளை ஏன் மறுக்கவில்லை?.. வாக்கு திருட்டு தரவுகளை கேட்ட தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கேள்வி

குற்றச்சாட்டுகளை ஏன் மறுக்கவில்லை?.. வாக்கு திருட்டு தரவுகளை கேட்ட தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கேள்வி
மேலும் கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர்களுக்கு உண்மை தெரியும், நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்ல் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் புள்ளிவிவரங்களுடன் அவர் இதை விளக்கினார். மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இடையே 5 மாத இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக வந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர்.

ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது என்று தெரிவித்தார்.