ஆந்திரா ஒடிசா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த 3 இளைஞர்கள் மாலியில் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி குடியரசில் 3 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் தெலுங்கு பேசும் நபர், மற்ற இருவர் ஒடிசா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
"ஜூலை 1 ஆம் தேதி, மாலி குடியரசின் கீஸ் பகுதியில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையின் வளாகத்துக்குள் ஆயுததாரிகள் நுழைந்தனர். அவர்கள் 3 இந்தியர்களை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்" என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டவர்களில் ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த குரகுல அமரலிங்கேஸ்வர ராவ் என்பவரும் ஒருவர் என்று குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த பனாட் வெங்கடரமணாவும் உள்ளார்.