இலங்கையில் இறந்த குட்டியுடன் மூன்று நாட்களாக சுற்றித் திரிந்த தாய் யானை

இலங்கையில் இறந்தபோன தனது குட்டியின் சடலத்துடன் திரிந்து கொண்டிருந்தது இந்த தாய் யானை.
இந்த அரிதான காட்சியைப் படம்பிடித்த புகைப்படக் கலைஞரின் கூற்றுப்படி, குட்டி பிறந்த மறுநாளே இறந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து, தாய் யானை இறந்த குட்டியை தன்னுடன் மூன்று நாட்களாக இழுத்துச் சென்றது. தாய் யானை ஏன் இப்படி செய்தது என்பதை கூறுவது கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது உணர்ச்சி வெளிப்பாடாகவோ துக்கம் அனுசரிக்கும் விதமாகவோ இருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர். ஏனெனில், யானைகள் தாய் மற்றும் குட்டிக்கு இடையேயான பாசத்தில் வலுவான பிணைப்புக்கு பெயர் பெற்றவை.