Airtel Recharge: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தனியா பணம் கட்டத் தேவையில்லை.. ஏர்டெல்லின் 4 அசத்தல் பிளான்கள்

Airtel Recharge: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தனியா பணம் கட்டத் தேவையில்லை.. ஏர்டெல்லின் 4 அசத்தல் பிளான்கள்
ஓடிடி தனியா பணம் கட்டத் தேவையில்லை.. ஏர்டெல்லின் 4 அசத்தல் பிளான்கள்!

சென்னை: இந்தியாவின் 2வது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் உடன் கூடிய 4 அசத்தலான பிளான்களை வழங்குகிறது. இந்த பிளான்களில் டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் வசதிகளோடு, Netflix, Jio Hotstar மற்றும் ZEE5 போன்ற ஓடிடி தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

மொபைல் போன் யூசர்கள், நெட்பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 போன்ற ஓடிடி தளங்களுக்கு தனித்தனியாக கட்டணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்யாமல் ஆல்-இன் - ஒன் பிளான்களை வழங்குகிறது ஏர்டெல்

வாடிக்கையாளர்களுக்கு Netflix Basic, JioHotsar Super, Zee5 Premium மற்றும் Airtel Xstream Play Premium போன்ற தளங்களை ஒரே ஒரு ரீசார்ஜ் மூலம் இலவசமாக அணுக அனுமதிக்கிறது ஏர்டெல்.

பல தனிப்பட்ட சந்தாக்களை நிர்வகிக்காமல் தங்களுக்குப் பிடித்த படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தங்கு தடையின்றி பார்க்க விரும்புவோருக்கு இந்த பிளான்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏர்டெல் நிறுவனம் ₹279, ₹598, ₹1729 மற்றும் ₹1798 விலையில் நான்கு ப்ரீபெய்டு OTT ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூபாய் 1798 பிளான்

இந்தப் பட்டியலில் முதல் திட்டம் ரூ.1798 பிளான். ஏர்டெல்லின் ரூ.1798 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த பிளானில் நெட்ஃபிளிக்ஸ் பேசிக், எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் மற்றும் அன்லிமிட்டட் 5G டேட்டா கிடைக்கிறது. இலவச ஹலோ டியூன்களும் உண்டு. இந்த பிளானில் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் இலவசம்.

ரூபாய் 1,729 பிளான்

இந்தப் பட்டியலில் இரண்டாவது திட்டம் ரூ.1729 பிளான். ஏர்டெல்லின் ரூ.1729 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த பிளானில் நெட்ஃபிளிக்ஸ் பேசிக், ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர், ZEE5 பிரீமியம், எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் மற்றும் அன்லிமிட்டட் 5G டேட்டா கிடைக்கிறது. இலவச ஹலோ டியூன்களும் உண்டு. இந்த பிளானில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் இலவசம்.

ரூபாய் 598 பிளான்

மூன்றாவது பிளான் ரூ.598 பிளான். ஏர்டெல்லின் ரூ.598 பிளானில் யூசர்கள், தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கொண்டது. இந்தத் திட்டத்தின் கூடுதல் நன்மைகள் நெட்ஃபிளிக்ஸ் பேசிக், ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர், ZEE5 பிரீமியம், எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் மற்றும் அன்லிமிட்டட் 5G டேட்டா. இலவச ஹலோ டியூன்களும் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் வழங்கும் மிக மலிவான ஓடிடி பேக் என்றால் அது ரூ.279 ப்ரீபெய்டு திட்டம். இந்த பேக்கை ரீசார்ஜ் செய்வதன் மூலம் யூசர்கள் 1 மாதத்திற்கு மொத்தமாக 1 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இந்த பிளானில் கால்ஸ், எஸ்.எம்.எஸ் சலுகைகள் கிடைக்காது. இந்த திட்டத்தின் நன்மைகள் நெட்ஃபிளிக்ஸ் பேசிக், ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர், ZEE5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் ஆகிய ஒடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது