மணல் கொள்ளையர்களுக்கு ஆப்பு.. ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு! அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்

மணல் கொள்ளையர்களுக்கு ஆப்பு.. ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு! அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்
திருச்சி ஆலந்தூர் பகுதிக்கு உட்பட்ட மாவடிகுளத்தில் சட்ட விதிகளை மீறி தினந்தோறும் 500 லாரிகளில் மணல் கொள்ளையை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

திருச்சி: திருச்சி ஆலந்தூர் பகுதிக்கு உட்பட்ட மாவடிகுளத்தில் சட்ட விதிகளை மீறி தினந்தோறும் 500 லாரிகளில் மணல் கொள்ளையை தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பகுதியில் எந்த அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ட்ரோன் மூலம் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் உத்தரவிட்டுள்ளது

மேலும் புகாருக்குள்ளான மாவடிகுளம் தண்ணீர் எந்த அளவு உள்ளது எனவும், நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்றுள்ளதா என்பது குறித்து திருச்சி பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காவேரி நீர் ஆதாரத்திற்கான பாதுகாப்பு சங்க தலைவர் சுடலை கண்ணு என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்," திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆலந்தூர் பகுதிக்கு உட்பட்ட மாவடிகுளம் இது 124 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியின் மிகப் பெரிய நீர் தேக்கமாகவும் பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் இந்த குளம் இருந்து வருகிறது.

இந்நிலையில் மேம்பாலம் அமைப்பதற்காக கிராவல் மணல் அள்ள அனுமதி பெற்றதாகக் கூறி மாவடி குளத்தில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. சட்ட விதிகளை பின்பற்றாமல் கனகரக வாகனங்கள் மூலம் தினந்தோறும் (500) ஐநூறு லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு சட்டவிரோதமாக மணல் அள்ளும் போது ஏரியில் ஆயக்கட்டு நிலம் முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடு