கோவையில் மாபெரும் வேளாண் கண்காட்சி

கோவையில் மாபெரும் வேளாண் கண்காட்சி
கோவை கொடிசியா அரங்கில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக வேளாண் தொடர்பான மிகப்பெரும் கண்காட்சியான

கோவை கொடிசியா அரங்கில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக வேளாண் தொடர்பான மிகப்பெரும் கண்காட்சியான 'அக்ரி இன்டெக்ஸ்' 2025 துவங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தியாவில் இருந்து டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஜப்பான்,சீனா போன்ற உலக நாடுகளில் இருந்தும் வேளாண் தொடர்பான நவீன இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது விவசாய துறையில் ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் விதமாக ரிமோட் மூலம் இயங்கும் உபகரணங்கள்,மற்றும் நெல் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மண்ணை தோண்டவும், சமன்படுத்தும் வகையிலும் ஒரே இயந்திரங்கள் போன்றவை இந்த கண்காட்சியில் இடம்பெற்றது. மேலும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.)தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவிகள் கண்காட்சியை கானவந்தவர்களின் கவனத்தை பெற்றது.