இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
சமண முனிவர்கள்

நாலடியார்

பொருட்பால்-நட்பியல்

நட்பிற் பிழை பொறுத்தல் அதிகாரம்

பாடல் எண் :226

"இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத்

துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்

விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ

கண்குத்திற்று என்றுதம் கை".

                                         -சமண முனிவர்கள்

பொருளுரை:

அடைதற்கரிய வானளவு உயர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! கண்ணைக் குத்தி விட்டது என்பதற்காக யாராவது தன் கைகளில் உள்ள விரல்களை வெட்டி எறிவார்களா? அதுபோல, துன்பங்களைச் செய்தாலும் அரிய நண்பர்களை விலக்கி விடுதல் தகுதியாகுமோ? ஆகாது.