முன்னர்உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் 2 தரப்பினர் மோதல் - நோயாளிகள் தவிப்பு

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 2 தரப்பினர் மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மோகன் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரின் குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு கைகலப்பில் முடிந்துள்ளது. அதில் காயமடைந்த இரு தரப்பினருமே ஒரே நேரத்தில் உளுந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட, அங்கேயே ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டனர். இதனால், அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் செய்வதறியாது தவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவத்திற்கு சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார் இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் விசாரித்து வருகின்றனர்