ஒகேனக்கலுக்கு நீர்வரத்து மீண்டும் உயர்வு - வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், அதுவே நேற்று காலை வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அது மேலும் படிப்படியாக உயர்ந்து இன்று காலைவிநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இதன் காரணமாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவு 11-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.