நிகிதாவிடம் புகாரை வாங்கியது யார்? காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணைt

நிகிதாவிடம் புகாரை வாங்கியது யார்? காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணைt
விசாரணைக்கு ஆஜரான டிஎஸ்பி சண்முக சுந்தரம்

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நீதிபதி ஜான் சுந்தர்லால் இன்று நான்காவது நாளாக விசாரணையை நடத்தி வருகிறார்.

காலை 8 மணிக்கே விசாரணையை தொடங்கி விட்ட அவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார். காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.

திருப்புவனத்தில் பணியாற்றும் போலீசார் சாதாரண உடையில் வெளியில் நின்றனர். நிகிதாவிடம் புகாரை வாங்கியது யார்? சிஎஸ்ஆர் பதிவு செய்தது யார்? அஜித்குமார் அமர வைக்கப்பட்ட இடம் எது? என்பன குறித்து அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. காவல் நிலைய சிசிடிவியையும் நீதிபதி ஆய்வு செய்தார்.

பிறகு அங்கிருந்து நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகைக்குச் சென்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் சென்றார். அங்கே, ஏடிஎஸ்பி சுகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோரை விசாரித்தார். அதனைத் தொடர்ந்து அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் நாளில், பணியில் இருந்த ஏடிஎஸ்பி சண்முகசுந்தரத்திடம் நீதிபதி விசாரித்து வருகிறார்.