உலக வங்கி அறிக்கையில் தகவல்,உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியாவுக்கு 4-வது இடம்

உலக வங்கி அறிக்கையில் தகவல்,உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியாவுக்கு 4-வது இடம்
உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியாவுக்கு 4-வது இடம்

புதுடெல்லி: “உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது” என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

வறுமை மற்றும் சமத்துவம்’ தொடர்பான கினி குறியீட்டு அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. கினி குறியீடு என்பது ஒரு நாட்டின் மக்கள்தொகையில் வருவாய் மற்றும் செல்வ சமத்துவமின்மை தொடர்பான அளவீடாகும். கினி அட்டவணையின்படி 0 (சரியான சமத்துவம்) முதல் 100 (முழுமையான சமத்துவமின்மை) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், குறைந்த மதிப்பெண் பெறும் நாடுகளில் மிகவும் சமமான விநியோகம் உள்ளதை குறிக்கும்.

இந்த அறிக்​கை​யில் இந்​தி​யாவை பற்றி கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா 25.5 என்ற கினி குறி​யீட்டு மதிப்​பெண் பெற்​றுள்​ளது, இது வரு​வாய் சமத்​து​வத்​தில் உலகள​வில் 4-வது சமமான நாடாக உள்​ளது. ஸ்லோ​வாக் குடியரசு, ஸ்லோவேனியா மற்​றும் பெலாரஸ் நாடு​களுக்கு அடுத்து இந்​தியா 4-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது.

கினி குறி​யீட்​டின்​படி இந்​தியா 25.5 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. கடந்த 2011-ம் ஆண்டு கினி அட்​ட​வணை​யில் இந்​தியா 28.8 மதிப்​பெண் பெற்​றிருந்​தது. தற்​போது ஸ்லோ​வாக் குடியரசு (24.1), ஸ்லோவேனியா (24.3) மற்​றும் பெலாரஸ் (24.4) ஆகிய மதிப்​பெண்​களு​டன் முதல் 3 இடங்​களில் உள்​ளன. சீனா (35.7) மற்​றும் அமெரிக்கா (41.8) உள்​ளிட்ட முக்​கிய உலகளா​விய பொருளா​தார நாடு​கள், அனைத்து ஜி7 நாடு​கள் மற்​றும் ஜி20 நாடு​களை விட​வும் இந்​தியா பெற்​றுள்ள 25.5 மதிப்​பெண் வரு​வாய் சமத்​துவ நிலை முன்​னேற்​றத்தை பிர​திபலிக்​கிறது.

உலகின் முக்​கிய​மான பொருளா​தார நாடு​களுக்கு நிக​ராக இந்​தியா முன்​னேற்​றம் அடைந்​துள்​ளது எனலாம். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்​டுக்​குள் இந்​தி​யா​வில் 17 கோடியே 10 லட்​சம் பேர் மிகத் தீவிர வறுமை நிலை​யில் இருந்து முன்​னேற்​றம் கண்​டுள்​ளனர்.