இளையராஜா குடும்பத்தில் மருமகளாக செல்ல வேண்டியவள் நான்!

சென்னை: நடிகை வனிதா கதை எழுதி, இயக்கி, நடித்துள்ள ‛மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "ராத்திரி சிவராத்திரி" பாடலை தனது அனுமதியின்றி வைத்துள்ளதால் அதனை நீக்க வேண்டும் என்று இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‛‛ இளையராஜா குடும்பத்தில் நான் ஒருத்தி. மருமகளாக போக வேண்டியவள்'' என்று கூறி அழுதபடி கூறினார்.
இந்த திரைப்படத்தில் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர், ஷகீலா, ஆர்த்தி கணேஷ்கர், சீனவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ‛ராத்திரி சிவராத்திரி' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையமைப்பில் வெளியான ‛மைக்கேல் மதன காமராசன்’ படத்தில் இடம்பெற்றிருந்து பேமஸான நிலையில் அதனை வனிதா விஜயகுமார் பயன்படுத்தி உள்ளார்
இந்நிலையில் தான் ‛ராத்திரி சிவராத்திரி' பாடலை பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது வனிதா விஜயகுமாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் ‛‛ராத்திரி.. சிவராத்திரி'' பாடலை நீக்க உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டஈடு கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா தொடர்ந்த வழக்கு குறித்து நடிகை வனிதா விஜயகுமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ராஜா (இளையராஜா) சார் அந்த பாடல் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதுபற்றி என்ன நினைக்கிறீங்க?'' என்ற கேள்வியை முன்வைத்தார்
அதற்கு வனிதா விஜயகுமார், ‛‛இப்போது தான் எனக்கு மெசேஜ் வந்தது. நான் நேரில் போய் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். அவரிடம் சொன்னேன். அவரும் ஓகே என்று தான் சொன்னார். பேட்டி எல்லாம் எடுக்கும் போதெல்லாம் கூட சொல்லியிருந்தேன். அவர் ஒரு லெஜன்ட். அவரை மிஞ்சமுடியாது. மியூசிக்கிற்கு அவர் கடவுள் மாதிரி. கடவுளே நம் மீது கோபம் கொண்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள். சின்ன வயதில் இருந்தே அவரது வீட்டிலேயே லிட்ரலாக வளர்ந்துள்ளேன். சில விஷயம் பேச முடியாது. உண்மையை சொன்னால் தப்பாகிவிடும். வேண்டாம்'' என்று அழுதாார்.
அப்போது, இன்னொரு பத்திரிகையாளர், ‛‛நீங்கள் அவரை பார்த்துள்ளீர்கள். புகைப்படம் எடுத்துள்ளீர்கள். அனுமதி வாங்கவில்லை என்று சொல்கிறாரே?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வனிதா விஜயகுமார், ‛‛சோனி மியூசிக்கிடம் இருந்து உரிமம் பெற்றுளோம். உதாரணம் சொல்கிறேன். ஒரு அப்பார்ட்மென்ட் காம்ப்ளக்ஸில் ஒரு வீடு வாங்குகிறோம். அந்த வீட்டின் பிராண்ட் என்று ஒன்று இருக்கும். நான் Prestige-ல் இருக்கிறேன். பிரெஸ்டீஜை நம்பி பணம் கொடுத்து பத்திரம் வாங்குகிறோம்என்று வைத்து கொள்வோம். அப்போது இன்னொருவர் நடுவில் வந்து இந்த பூமி என்னுடையது என பணம் கேட்டால் என்ன செய்வது.
குட்பேட் அக்லி, மஞ்சுமல் பாய்ஸ் உள்ளிட்ட படங்கள் விவகாரத்திலும் வழக்கு போட்டாங்க.. ராஜா அப்பா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாங்க. நான் பார்த்தேன். இந்த மாதிரி எனக்கு மரியாதை கொடுத்து என்னிடம் அனுமதியாக வாங்கினால் காசு கூட தேவையில்லை. நான் கொடுத்துவிடுவேன் என்று சொன்னார். நான் அதனை தான் செய்தேன். நான் அந்த வீட்டில் பூஜை செய்துள்ளேன். அந்த வீட்டில் ஜீவா அம்மா கையில் லாக்கர் சாவி வாங்கி நகை எடுத்து அம்மனுக்கு போட்டு பூஜை செய்துள்ளேன். அவ்வளவு தூரம் அந்த வீட்டுக்காக நான் உழைத்துள்ளேன். அந்த குடும்பத்தில் நான் ஒருத்தி. மருமகளாக போக வேண்டியவள். இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது'' என்று கூறிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.