அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் காவேரி ரத யாத்திரைக்கு திருச்சி பெட்டவாய்தலையில் வரவேற்பு

All India Hindu Temples Protection Association welcomes Kaveri Ratha Yatra at Petavaitalai, Trichy

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் காவேரி ரத யாத்திரைக்கு திருச்சி பெட்டவாய்தலையில் வரவேற்பு

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை நடத்தும் 13 ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரையானது குடகு மலையில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக இன்று திருச்சி மாவட்டம் பெட்டவாய்தலை பகுதிக்கு வருகை தந்தது.ரதத்தில் வந்திருந்த காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இந்த ரத யாத்திரையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்துடைய நிறுவனர் வாழும் கலியுக சித்தர் தவத்திரு.சுவாமி இராமானந்தா மகாராஜ் அவர்கள் தலைமையில் நாகேஷ்வரந்தா சரஸ்வதி சுவாமி , மேகானந்தா சரஸ்வதி சுவாமி , கார்த்தியானந்தா சரஸ்வதி சுவாமி ,கோபால் சுவாமி , லேபமுத்ரானந்தா சுவாமி, முருகானந்தா சுவாமி , ஞானானந்தாபுரி சுவாமி , மீனாட்சி சுந்தரானந்தா சுவாமி, கைலாச ஆனந்தாபுரி சுவாமி,சங்கு மேஷ்வரானந்தாபுரி சுவாமி, ரவிச்சந்திரன் ஜி ,பரமானந்தம் ஜி , வித்தியாம்பா மாதாஜி சரஸ்வதி அம்மா ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆலோசனை படி ஜி மாநில பொறுப்பாளர் மாணிக்கவேல் தலைமையில் பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன் , கண்ணன் உட்பட பல நிர்வாகிகள் இந்த விழா ஏற்பாட்டுகளை செய்து இருந்தனர்.