சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ.18000 சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ.18000 சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ.18000 சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ.18000 சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!

சேலம் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 3 பணியிடங்கள்; டிகிரி, டிப்ளமோ தகுதி; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

சேலம் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Genetic Counsellor 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelors degree in Sociology/ Psychology/ Social Work/ Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000

Radiographer 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Sc. Radiography படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 23 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 10,000

Audiologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Audiologist Course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 23 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 23,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். sவிண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2025/07/2025070410.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், பழைய நாட்டாண்மை கட்டிட வளாகம், சேலம் மாவட்டம் - 636001

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.07.2025