டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இன்னும் 3 மாதத்தில் வரும் முடிவுகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இன்னும் 3 மாதத்தில் வரும் முடிவுகள்
குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இன்னும் 3 மாதத்தில் வரும் முடிவுகள்

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 13.89 லட்சம் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் எத்தனை நாட்களில் வெளியாகும் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியுள்ளார்

2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இதற்கான முடிவுகள் இன்னும் 3 மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 13.89 லட்சம் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் எத்தனை நாட்களில் வெளியாகும் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியுள்ளார்.

2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இதற்கான முடிவுகள் இன்னும் 3 மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

அரசு பணியில் சேர வேண்டும் என்பவர்களின் முதல் கனவாக இருப்பது டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் தேர்வாகும். அதிக காலிப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் எழுதலாம் என்ற காரணத்தினால் இத்தேர்வை ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கில் எழுதி வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக் காப்பாளர், வனக் காவலர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய பதவிகள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

ஒரே கட்ட தேர்வு

குரூப் 4 தேர்வு ஒரு கட்டமாக நடத்தப்படும் தேர்வாகும். இத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் கட்-ஆஃப் நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெற்றால், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படு, கலந்தாய்வின் மூலம் பணி நியமனம் வழங்கப்படும்.

தேர்வு தாள் மூன்று பகுதியை கொண்டு நடைபெறும். 100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழி தகுதித் தாள் கட்டாயம் ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ஆங்கிலத்தாள் உள்ளது. அதைத் தவிர பொது அறிவு 75 கேள்விகள் மற்றும் நுண்ணறிவு (Aptitude) 25 கேள்விகள் என 200 கேள்விகள் கொண்டு 300 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது

13.89 லட்சம் பேர் பங்கேற்பு

2025-ம் ஆண்டு குரூப் 4 தேர்வு எழுத 13,89,738 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தேர்விற்கான 4,922 மையங்கள் மாநில முழுவதும் அமைக்கப்பட்டது.

வினாத்தாள் கசிவா?

இன்று நடைபெறவிருந்த தேர்வு வினாத்தாள் தனியார் பேருந்துகளில் எடுத்துசெல்வதால், கசியக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. இதனைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு அனுப்பும் முறை குறித்து விளக்கம் அளித்தது

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 13.89 லட்சம் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் எத்தனை நாட்களில் வெளியாகும் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியுள்ள

2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இதற்கான முடிவுகள் இன்னும் 3 மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

அரசு பணியில் சேர வேண்டும் என்பவர்களின் முதல் கனவாக இருப்பது டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் தேர்வாகும். அதிக காலிப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் எழுதலாம் என்ற காரணத்தினால் இத்தேர்வை ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கில் எழுதி வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக் காப்பாளர், வனக் காவலர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய பதவிகள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

இந்தாண்டு குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகி, மே 24 வரை பெறப்பட்டது. தொடர்ந்து, இதற்கான தேர்வு இன்று (ஜூலை 12) நடைபெறுகிறது. வழக்கமாக ஞாயிற்றுகிழமைகளில் தேர்வு நடத்தப்படும் நிலையில், இந்த முறை சனிக்கிழமையில் தேர்வு நடைபெறுகிறது.

ஒரே கட்ட தேர்வு

குரூப் 4 தேர்வு ஒரு கட்டமாக நடத்தப்படும் தேர்வாகும். இத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் கட்-ஆஃப் நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெற்றால், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படு, கலந்தாய்வின் மூலம் பணி நியமனம் வழங்கப்படும்.

தேர்வு தாள் மூன்று பகுதியை கொண்டு நடைபெறும். 100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழி தகுதித் தாள் கட்டாயம் ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ஆங்கிலத்தாள் உள்ளது. அதைத் தவிர பொது அறிவு 75 கேள்விகள் மற்றும் நுண்ணறிவு (Aptitude) 25 கேள்விகள் என 200 கேள்விகள் கொண்டு 300 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.

13.89 லட்சம் பேர் பங்கேற்பு

2025-ம் ஆண்டு குரூப் 4 தேர்வு எழுத 13,89,738 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. தேர்விற்கான 4,922 மையங்கள் மாநில முழுவதும் அமைக்கப்பட்டது.

வினாத்தாள் கசிவா?

இன்று நடைபெறவிருந்த தேர்வு வினாத்தாள் தனியார் பேருந்துகளில் எடுத்துசெல்வதால், கசியக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. இதனைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு அனுப்பும் முறை குறித்து விளக்கம் அளித்தது.

குரூப் 4 தேர்வு வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாள் உள்ளிட்ட மந்தணப் பொருட்கள் சென்னை தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து மாவட்ட கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 314 வட்டங்களில் உள்ளதால், வினாத்தாள்கள் மாவட்ட கருவூலங்களிலிருந்து வட்டத் தலைநகரங்களிலுள்ள சார்நிலை கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இன்னும் 3 மாதத்தில் தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதில், டிஎன்பிஎஸ்சி தீவிரம் காட்டி வருகிறது. தலைவர் எஸ்.கே.பிரபாகர் பொறுப்பு ஏற்ற பின், முடிவுகள் விரைந்து வெளியிடப்படுகிறது. அந்த வகையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. தேர்வு பணிகளை ஆய்வு செய்த டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், குரூப் 4 தேர்வின் விடைத்தாள்கள் விரைந்து மதிப்பீடு செய்யப்பட்டு, இன்னும் 3 மாதங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார்.

அக்டோபர் இறுதிக்குள் குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தேர்வர்களிடையே மகிழ்ச்சி அளித்துள்ளது. இதன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்து பணி நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வெளியிடப்பதற்கு பின்பு வரை பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி சேர்க்க வாய்ப்பு உள்ளது.