இந்தியாவிலேயே முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிக்க தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த பழங்குடி மாணவி

இந்தியாவிலேயே முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிக்க தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த பழங்குடி மாணவி
பழங்குடி மாணவியான கவிதா, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் தேர்வாகி பெருமை பெற்றுள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க தேர்வாகி அசத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு, மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடும் வகையில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்கு பலனாக அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பான கல்வி வழங்கப்பட்டு வருவதுடன், தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையிலும் இடம்பிடித்து வருகின்றனர். அந்த வரிசையில் மேலும் ஒரு மாணிக்கமாக தன்னை இணைத்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இன மாணவி கவிதா