அடுத்ததாக மரங்களின் மாநாடு.. ஆயிரம் மரங்களுக்கு முன் பேசுகிறேன்.. சீமான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அடுத்ததாக மரங்களின் மாநாடு.. ஆயிரம் மரங்களுக்கு முன் பேசுகிறேன்.. சீமான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
சீமான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

திருச்சி: ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மரங்களின் மாநாட்டை ஆகஸ்ட் 17ஆம் தேதி நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். "மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காக பேசுவோம்" என்ற தலைமையில் ஆயிரக்கணக்கான மரங்களுக்கு மத்தியில் உரையாற்ற உள்ளதாகவும் சீமான் கூறியுள்ளார்

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைமையில் ஆடு, மாநாடுகள் மாநாட்டை நடத்தினார். இதில் ஆடுகள், எருமை மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள், செம்மறி ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனிடையே ஆடு, மாடுகள் முன்னிலையில் சீமான் பேசிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விவாதமாகி வருகிறது.

அதேபோல் ஆடு, மாடுகள் முன்னிலையில் சீமான் ஆவேசமாக பேசியது மக்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிக்கல் அடங்குவதற்கும் சீமான், அடுத்த அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது அடுத்ததாக மரங்கள் மாநாட்டை சீமான் நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், அடுத்ததாக ஆகஸ்ட் 17ல் ஒரு மாநாடு நடத்துகிறேன். மரங்களின் மாநாடு நடத்துகிறேன். மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காக பேசுவோம். மரம் மண்ணின் வரம், வளர்ப்பதே அறம். மரம் செய்வோம். நீரின்றி அமையாது உலகு, காடின்றி அமையாது நீர்.. இப்படி நான் ஒரு மாநாடு போடுகிறேன். ஆயிரக்கணக்கான மரங்களுக்கு இடையில்.. மரங்கள் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

உயர்திணை ஒழுங்காக வாழ வேண்டும் என்றால், அஃறிணை ஒழுங்காக இருக்க வேண்டும். கால்நடைத்துறைக்கு ஒரு அமைச்சகம் இருக்கிறது.. அது எதற்கு இருக்கிறது? ஆறு, மாடுகள் இல்லாமல் ஒரு மண் எப்படி வளமாகும்? இயற்கை வேளாண்மை ஆடு, மாடு சாணி இன்றி எப்படி வரும்? ஆடும், மாடும் செல்வம். சாராயத்தின் சந்தை மதிப்பை விட பாலின் சந்தை மதிப்பு அதிகம்

நான் ஆட்சிக்கு வந்த பின் வேளான்மை செய்வது அரசுப் பணி என்று சொல்லுவேன். சாராய விற்பதற்காக அரசுப் பணிக்கு அனுப்புவீர்கள்.. இதற்கு அனுப்ப மாட்டீர்களா? பீஃப் ஏற்றுமதியில் இந்தியா தான் முதலிடம். விமர்சிப்பவர்களுக்கும் சேர்த்து போராடுவதே எனது வேலை. என்னை விமர்சிப்பவர்கள் வீட்டிற்கு சென்று பால், தயிர் சாப்பிட மாட்டார்களா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.