புதிய ரேஷன் கார்டு.. மகளிர் உரிமை தொகைக்கு எங்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. வேலூர் கலெக்டர் விளக்கம்

புதிய ரேஷன் கார்டு.. மகளிர் உரிமை தொகைக்கு எங்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. வேலூர் கலெக்டர் விளக்கம்
புதிய ரேஷன் கார்டு.. மகளிர் உரிமை தொகைக்கு எங்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் பலரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளனர். 21 வயது நிரம்பிய, புதிதாக ரேஷன் கார்டு வாங்கி ஏழை, எளிய பெண்கள் பலரும் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறும் நாள், இடம், பகுதிகளை கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார். அதன்விவரங்களை பார்ப்போம்

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்பட உள்ளது. அ

தைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்

முகாம் நடைபெறும் நாள், இடங்களின் விவரம் வருமாறு:- நாளை (செவ்வாய்க்கிழமை) வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 1,3-வது வார்டு பொதுமக்களுக்கு காட்பாடி சென்னாங்குட்டை பெருமாள் கோவிலிலும், குடியாத்தம் நகராட்சி 13,14-வது வார்டு பொதுமக்களுக்கு ஆர்.எஸ்.சாலை பாபு மகாலிலும், காட்பாடி ஊராட்சி ஒன்றியம் பொன்னை கிராமமக்களுக்கு பொன்னை சாமுண்டீஸ்வரி மகாலிலும், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி பொதுமக்களுக்கு கொண்டசமுத்திரம் ஆர்.ஜி.டி.மகாலிலும், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் அழிஞ்சிக்குப்பம், ராஜாக்கல் ஆகிய கிராம பொதுமக்களுக்கு அழிஞ்சிக்குப்பம் எம்.ஜி.மகாலிலும், கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்கனேரி, மேல்மாயில் ஆகிய கிராம பொதுமக்களுக்கு மேல்மாயில் சித்ரா மகாலிலும் நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (புதன்கிழமை) வேலூர் மாநகராட்சி 33,40-வது வார்டு மக்களுக்கு கஸ்பா சமுதாயகூடத்திலும், பேரணாம்பட்டு நகராட்சி 2,3,4-வது வார்டு மக்களுக்கு பேரணாம்பட்டு சவுக்ரோடு ஸ்டார்பங்ஷன் ஹாலிலும், குடியாத்தம் நகராட்சி 15,36-வது வார்டு மக்களுக்கு ஆர்.எஸ்.ரோடு பாபுமஹாலிலும், பள்ளிகொண்டா பேரூராட்சி 1 முதல் 18-வது வார்டு மக்களுக்கு பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமுதாய கூடத்திலும், கணியம்பாடி ஊராட்சி மக்களுக்கு கணியம்பாடி எஸ்.எஸ்.மஹாலிலும், குடியாத்தம் ஊராட்சி கொண்டசமுத்திரம் மக்களுக்கு கொண்டசமுத்திரம் ஆர்.ஜி.டி.கல்யாண மண்டபத்திலும் நடக்கிறது.

வருகிற 17-ந் தேதி வேலூர் மாநகராட்சி 36-வது வார்டு மக்களுக்கு சைதாப்பேட்டை மதராஸ்தகரூல் ஹசநாத் வளாகத்திலும், பேரணாம்பட்டு நகராட்சி 5,6,7 வார்டு மக்களுக்கு பேரணாம்பட்டு சவுக்ரோடு ஸ்டார் பங்ஷன்ஹாலிலும், காட்பாடி ஊராட்சி அவலரங்கப்பள்ளி, பாலாயகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு கொடவரிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், குடியாத்தம் ஊராட்சி டி.பி.பாளையம், விழுதோனிபாளையம் ஆகிய கிராமங்களுக்கு டி.பி.பாளையம் கணக்கர்பட்டி எம்.ஆர்.பி. கல்யாணமண்டபத்திலும் நடைபெற உள்ளது.

-ந் தேதி திருவலம் பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டு மக்களுக்கு திருவலம் வில்வநாதேஸ்வரர் கோவில் திருமண மண்டபத்திலும், காட்பாடி ஊராட்சி கே.என்.பாளையம், தெங்கால், பரமசாத்து ஆகிய கிராமங்களுக்கு தெங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், பேரணாம்பட்டு ஊராட்சி சொக்கரிஷிகுப்பம், எம்.வி.குப்பம் ஆகிய கிராமங்களுக்கு மேல்பட்டி பாலமுருகன் திருமண மண்டபத்திலும், கே.வி.குப்பம் ஊராட்சி பில்லாந்திப்பட்டு, வேப்பங்கனேரி கிராமங்களுக்கு வேப்பங்கனேரி கேப்டன் பழனிமல்லிகா மஹாலிலும் நடக்கிறது.

19-ந் தேதி வேலூர் மாநகராட்சி 29,30-வது வார்டு மக்களுக்கு தோட்டப்பாளையம் எட்டியம்மன் பள்ளியிலும், காட்பாடி ஊராட்சி பெருமாள்குப்பம், மகிமண்டலம், அம்மவாரிபள்ளி கிராமங்களுக்கு மேல்போடிநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், அணைக்கட்டு ஊராட்சி அணைக்கட்டு, அப்புக்கல் கிராமங்களுக்கு அணைக்கட்டு டி.வி.ஆர்.மஹாலிலும், கணியம்பாடி ஊராட்சி மக்களுக்கு கணியம்பாடி எஸ்.எஸ்.மஹாலிலும் நடைபெற உள்ளது. இதேபோன்று அடுத்த மாதம் 14-ந் தேதி வரை பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது" இவ்வாறு வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.