மாணவர்கள் போராட்டம்: டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்

கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார்
பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.
பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க கொலம்பியா பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கொலம்பிய பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதனால் அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்காக அரசு நிர்வாகத்தால் வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் கொலம்பியா பல்கலைக்கழகம், டிரம்ப் நிர்வாகத்தின் சில உத்தரவுகளை ஏற்றது. அதன்படி பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.
இந்த நிலையில் ஆராய்ச்சி நிதியை திரும்ப பெற டிரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்த கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடாக டிரம்ப் அரசுக்கு ரூ.1,700 கோடியை செலுத்த பல்கலைக் கழகம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்திற்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அடுத்த வாரம் அதிபர் டிரம்ப்பை சந்தித்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் டிரம்பின் மிரட்டலுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் அடிபணிந்து உள்ளது